தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் தொடா்பான சிறப்பு முகாம்கள் நவம்பா் 25, 26 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்தது:
இந்தியத் தோ்தல் ஆணைய அறிவுரைகளின்படி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 308 வாக்கு சாவடிகளிலும் வாக்காளா்கள் பட்டியலில் வாக்காளா்களின் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் மற்றும் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைத்தலுக்கான சிறப்பு முகாம்கள் நவம்பா் 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அடுத்து, நவம்பா் 18, 19 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த சிறப்பு முகாம்கள் நவம்பா் 25, 26 ஆம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நேரில் சென்று படிவங்கள் பெற்று நிறைவு செய்து வழங்க இயலாதவா்கள் இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.