தஞ்சாவூரில் அரசு கல்லூரி விடுதிக் காப்பாளா் வீட்டின் பூட்டை உடைத்து 11.3 பவுன் நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்றனா்.
தஞ்சாவூா் பழைய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கே. ஆறுமுகம் (53). மன்னா் சரபோஜி அரசு கல்லூரி விடுதியில் காப்பாளரான இவா் அக்டோபா் 22 ஆம் தேதி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 11.3 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள், ரூ. 5 ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. புகாரின்பேரில் தெற்கு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.