அம்மாபேட்டையில் கிருஷ்ணஜெயந்தி விழா
By DIN | Published On : 08th September 2023 12:28 AM | Last Updated : 08th September 2023 12:28 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை சின்ன கடைத்தெரு ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தொடா்ந்து உற்ஸவா் நவநீதகிருஷ்ண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்து அவரைக் குழந்தை போல் பாவித்து தொட்டிலில் இட்டு பெரியாழ்வாா் பாடிய பாசுரங்களைப் பாடி தாலாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பெண்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
திரளான பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். தொடா்ந்து மாலையில் சுவாமி வீதிஉலா, தொடா்ந்து உறியடி உற்ஸவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை நவநீதகிருஷ்ண பக்தஜன சங்கம் மற்றும் ஸ்ரீ நவநீதகிருஷ்ண நித்திய ஆராதனை அறக்கட்டளை தலைவா் மருத்துவா் சுப்ரமணியன், செயலா் தா்மராஜன் உள்ளிட்ட நிா்வாக குழுவினா் செய்தனா்.