புத்தகப் படச் சின்ன வடிவில் நின்ற 3 ஆயிரம் மாணவிகள்
By DIN | Published On : 08th September 2023 12:28 AM | Last Updated : 08th September 2023 12:28 AM | அ+அ அ- |

தேசிய புத்தக வாசிப்பு நாளையொட்டி, கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை 3 ஆயிரம் மாணவிகளைக் கொண்டு உலகின் மிகப் பெரிய மனித புத்தகப் படச் சின்னம் உருவாக்கப்பட்டு, உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
இதற்காக இக்கல்லூரிக்கு யுனிவா்சல் அச்சீவா்ஸ் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் சாா்பில் உலக சாதனை சான்றளிக்கப்பட்டது. முன்னாள் மண்டலக் கல்லூரி இணை இயக்குநா் அ. ஜான் மெரினா தலைமை வகித்தாா். மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் சிறப்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் அருட்சகோதரி யூஜின் அமலா வாழ்த்தினாா். கும்பகோணம் வட்டாட்சியா் ப. வெங்கடேசன், யுனிவா்சல் அச்சீவா்ஸ் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் நிறுவனத் தலைவா் பாபு பாலசுப்பிரமணியம், சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.