புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை
By DIN | Published On : 19th September 2023 01:16 AM | Last Updated : 19th September 2023 01:16 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.20) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:
மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில், ஞானம் நகா், புறவழிச்சாலை, எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூா், காந்தாவனம், சித்தா்காடு, ஆலங்குடி, நெல்லித்தோப்பு, கடகடப்பை, தளவாபாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகா், பனங்காடு, கீழ வஸ்தா சாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த் நகா், பரிசுத்தம் ஜேம்ஸ் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G