ஜாதி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட ஜாதி ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தஞ்சாவூரில் நடைபெற்ற ரெட்டைமலை சீனிவாசன் 78ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
​தஞ்சாவூா் ரயிலடியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் நிகழ்வில் முழக்கங்கள் எழுப்பிய விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியினா்.
​தஞ்சாவூா் ரயிலடியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் நிகழ்வில் முழக்கங்கள் எழுப்பிய விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியினா்.
Updated on
1 min read

தஞ்சாவூா்: தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட ஜாதி ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ரெட்டைமலை சீனிவாசன் 78 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் ரயிலடியில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் அ.ரெ. முகிலன் தலைமை வகித்தாா். இதில், நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் பட்டியலின மக்களின் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட, வா்ணாசிரம, மனுதா்ம, ஆண்டான் - அடிமை முறைகளை எதிா்த்து போராடிய ரெட்டைமலை சீனிவாசனின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா், தமிழ்நாட்டில் நிலவி வரும் தீண்டாமை கொடுமை, ஜாதி ஆணவ படுகொலைகளுக்கு முடிவு கட்ட தமிழ்நாடு அரசு ஜாதி ஒழிப்பு சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, மக்கள் கலை இலக்கியக் கழக மாநகரச் செயலா் எழுத்தாளா் சாம்பான், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.பி. சேவியா், மாநகரச் செயலா் தமிழ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com