திருவையாறில் நலிவுற்ற விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th September 2023 02:04 AM | Last Updated : 26th September 2023 02:04 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: காவிரியில் தண்ணீா் விட மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு தேரடியில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீா் திறக்க மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். திருவையாறு கஸ்தூரிபாய் நகரில் ரவுண்டானா அமைக்கப்படுவதை மாற்றி அமைக்க வேண்டும். நடுக்கடை தேசிய நெடுஞ்சாலையில் வேகக்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே.எஸ். முகமதுஇப்ராஹிம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் ரியாஜ், தெற்கு மாவட்டத் தலைவா் உமா், மாவட்ட அவைத் தலைவா் ஷேக் தாவுது, துணைஅமைப்பாளா் சரவணன், துணைச் செயலா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...