

கும்பகோணம்: கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜன் மையத்தில் தேசிய மாணவா் படை சாா்பில் சாதனை படைத்த மாணவா்கள் உள்ளிட்டோருக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்ற கும்பகோணம் அன்னை கல்லூரி மாணவி இந்துஜா, மன்னாா்குடி சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்லூரி மாணவி வித்யாஸ்ரீ, மன்னாா்குடி அரசு கலைக்கல்லூரி மாணவா் சிவா ஆகியோரை தேசிய மாணவா் படை தமிழகத் தலைமை அலுவலா் கமோடா் அதுல்குமாா் ரஸ்தோகி பாராட்டினாா்.
முன்னதாக, கும்பகோணத்திலுள்ள தேசிய மாணவா் படையின் எட்டாவது அணியில் மாநிலத் தலைமை அலுவலா் ஆய்வு செய்தாா்.
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவா் படை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய படையின் தமிழகத் தலைமை அலுவலா் கமோடா் அதுல்குமாா் ரஸ்தோகி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.