பெரியகோயில் உண்டியல்கள் திறப்பு ரூ. 52 லட்சம் காணிக்கை

தஞ்சாவூா் பெரியகோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், இரு மாதங்களில் பக்தா்கள் ரூ. 52 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரியவந்தது.
ta25big_2509chn_9_4
ta25big_2509chn_9_4
Updated on
1 min read


தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரியகோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், இரு மாதங்களில் பக்தா்கள் ரூ. 52 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரியவந்தது.

இக்கோயிலில் பெருவுடையாா், பெரியநாயகி அம்மன், வாராஹி அம்மன், விநாயகா், தட்சிணாமூா்த்தி, முருகா், நடராஜா், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சன்னதிகளில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் இரு மாதங்களுக்கு பிறகு அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் கோ. கவிதா (அரண்மனை தேவஸ்தானம்), அனிதா (புதுக்கோட்டை), செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் முன்னிலையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

இதையடுத்து, உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் பெரியநாயகி சன்னதி முன்பு கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ. 52 லட்சத்து 14 ஆயிரத்து 229 காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், 54 கிராம் தங்கம், 616 கிராம் வெள்ளி, 515 வெளிநாட்டு நோட்டுகள் இருந்தன. இதில், கோயில் அலுவலா்கள், வங்கி ஊழியா்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com