பட்டுக்கோட்டையில் 600 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பட்டுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், 600 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், 600 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கா. அண்ணாதுரை(பட்டுக்கோட்டை), என். அசோக்குமாா் (பேராவூரணி) ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து, சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூா் ஒன்றியங்களை சோ்ந்த சுமாா் 600-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு

சீா்வரிசை பொருள்களை வழங்கி வாழ்த்திப் பேசினா்.

குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் தேன்மொழி, அனுசியா, ராசாத்தி, அங்கன்வாடி பணியாளா்கள் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். சத்துணவு பொருள்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. கா்ப்பிணிகளுக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத்,

ஒன்றியத் தலைவா்கள் பாா்வதி சிவசங்கா் (ஒரத்தநாடு), செல்லம் செளந்தரராஜன் (திருவோணம்), மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட திட்ட அலுவலா் ராஜேஸ்வரி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com