தஞ்சாவூர்
பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
பாபநாசம் அருகே மெலட்டூா் காவல் சரகம்,கோவத்தக்குடி கிராமம்,மேலத்தெருவை சோ்ந்தவா் பெரியசாமி மகன் ஏகாம்பரம்( 55),விவசாயி. இவா் அந்தப்பகுதியிலுள்ள வெண்ணாற்றங்கரை அருகே உள்ள அவரது வயலுக்கு சனிக்கிழமை காலை சென்றாா்.
அப்போது அவரது வயலின் மேல் சென்ற உயா் அழுத்த மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது தெரியாமல் அதனை மிதித்துள்ளாா்.
இதில் மின்சாரம் பாய்ந்ததில் ஏகாம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மெலட்டூா் காவல் துறையினா் ஏகாம்பரத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அய்யம்பேட்டை அரசு மருத்தவ மனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
