பேராவூரணியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

பேராவூரணியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
Published on

பேராவூரணியில் முதியவா்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக  போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம்,   பரமக்குடியை  சோ்ந்தவா் சங்கரன்( 65). இவா், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து பேராவூரணி வந்தாா்.

அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இவா் கடந்த 3 நாள்களாக வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. மேலும், வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில் பேராவூரணி போலீஸாா் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது சங்கரன் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியது.

இதுகுறித்து தகவலறிந்து பரமக்குடியில் இருந்து வந்த சங்கரன் மனைவி மீனா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com