பெண் தொழிலதிபரை தாக்கி நகைகள், பணம் கொள்ளை

பெண் தொழிலதிபரைக் கட்டிப் போட்டு தாக்கி தங்கம், வைர நகைகள், பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
Published on

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை வீடு புகுந்து பெண் தொழிலதிபரைக் கட்டிப் போட்டு தாக்கி தங்கம், வைர நகைகள், பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருளானந்த நகா் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் மறைந்த அண்ணாமலை செட்டியாரின் மனைவி சேதுக்கரசி (70). தொழிலதிபா். இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது மா்ம நபா்கள் சிலா் வீட்டின் முன் பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனா்.

மேலும் சேதுக்கரசியை துணியால் முகத்தைக் கட்டி அவரை மூக்கில் தாக்கி விட்டு, அவரிடம் இருந்த 9 பவுன் தங்க நகைகள், தலா 2 வைரக் காப்புகள், வைர மோதிரங்கள், தோடுகள், ரொக்கம் ரூ. 19 ஆயிரம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

இது குறித்து சேதுக்கரசி அளித்த புகாரின் பேரில் தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com