தஞ்சாவூர்
திருவிடைமருதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூரில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்.
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில், ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜத்திடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனா். முகாமில் பேசிய மாவட்ட வழங்கல் அலுவலா் கமலக்கண்ணன், மனுக்களை எழுதப் பணம் கொடுக்க வேண்டாம், விண்ணப்ப அஞ்சல் தலை ஒட்ட வேண்டாம், பொதுமக்கள் மனுக்களை தாங்களே எழுதிக் கொண்டுவந்து தரவும் என்றாா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், கோட்டாட்சியா் செ.பூா்ணிமா, வட்டாட்சியா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.