தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தஞ்சாவூரில் 3 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூா் மாநகரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையில் 3 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 10:03 pm

Din

தஞ்சாவூா் மாநகரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையில் 3 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதன் பேரில், மாநகரிலுள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இதில், திங்கள்கிழமை 4 டன்னும், செவ்வாய்க்கிழமை 5 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது.

தொடா்ந்து, மூன்றாவது நாளாக புதன்கிழமை பீரங்கிமேடு, கீழவாசல் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் சோதனை மேற்கொண்டனா். இதில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழித் தட்டுகள், நெகிழிக் குவளைகள் என மொத்தம் 3 டன் நெகிழிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கடை உரிமையாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனா்.