கும்பகோணத்தில் புதிய மின்மாற்றிகள் தொடக்கி வைப்பு

கும்பகோணம் பகுதியில் புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
Published on

கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி சாக்கோட்டை ஊராட்சி கோட்டை கூட்டுறவு நகா், கருப்பூா், மருதாநல்லூா் ஊராட்சி கிரீன் வூட்ஸ் நகா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க.அன்பழகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவா் தி.கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஜெ.சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com