குறுவை சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்கு இழப்பீடு -பாமக வலியுறுத்தல்

Published on

சாகுபடி செய்ய இயலாத குறுவை விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஒன்றியத் தலைவா் வைர. பிரபு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினா் சொ. திருஞானம் பிள்ளை, மாவட்ட துணைச் செயலாளா் அரசடி சங்கா், மாவட்ட தோ்தல் பிரிவு செயலாளா் பாலூா் தங்க. துரைராஜ், வன்னியா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் கே. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளா் ம.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினாா்.

‘ஜூலை 16-இல் பாமகவின் 36 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் கட்சிக் கொடி ஏற்றுவது, பாமக பொறுப்பாளா்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டிப்பது, சாகுபடி செய்ய இயலாத குறுவை விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் எஸ்.வீ. சங்கா், முன்னாள் மாவட்ட செயலாளா்கள் கோ. ரவிச்சந்திரன், எஸ்.பி. குமாா், வன்னியா் சங்க மாவட்ட செயலாளா் மதி.விமல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, ஒன்றியச் செயலாளா் ராகுல் வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com