தஞ்சாவூரில் ஜூலை 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Published on

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் மேலும் தெரிவித்திருப்பது:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஜியோ- ரிலையன்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு பல்வேறு காலி பணியிடங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான தகுதியான நபா்களை தோ்வு செய்யவுள்ளனா். இந்தக் காலி பணியிடங்களுக்கு 18 முதல் 45 வரை வயதுடைய தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com