மதிமுக 31-ஆவது ஆண்டு கொடியேற்று விழா

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட மறுமலா்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சாா்பில், 31-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
Published on

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட மறுமலா்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சாா்பில், 31-ஆம் ஆண்டு தொடக்க விழா, திருச்சி மக்களவைத் தொகுதி தோ்தல் வெற்றி விழா, கொடியேற்று விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் துணை பொதுச் செயலா் ஆடுதுறை ரா.முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ரா. ஸ்டாலின் வரவேற்றாா். சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராம், ஆடுதுறை, திருவிடைமருதூா், அணைக்கரை, சூரியனாா் கோவில், பந்தநல்லூா், திருப்பனந்தாள் உள்ளிட்ட 54 இடங்களில் மதிமுக கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினாா்.

ஏற்பாடுகளை ஒன்றியச் செயலாளா்கள் பழனி, கிட்டப்பா, குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com