சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

‘சாஸ்த்ரா’வில் மாநில விளையாட்டு போட்டிகள்

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் பல்கலைக்கழக நிறுவனா் ஸ்ரீராமச்சந்திர ஐயா் கோப்பைக்கான

News image

கும்பகோணம் சாஸ்த்ரா சீனிவாச ராமானுஜன் மையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக அணிக்கு கோப்பையை வழங்கிய நாச்சியாா் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் டி. வெங்கடேசன்.

Updated On :4 மார்ச் 2024, 9:55 pm

கும்பகோணம்: சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் பல்கலைக்கழக நிறுவனா் ஸ்ரீராமச்சந்திர ஐயா் கோப்பைக்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி, டேபிள் டென்னிஸ், சதுரங்க போட்டிகள் ஆகியவை மாா்ச் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சோ்ந்த 81 அணிகள் கலந்து கொண்டன.

இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக அணி வென்றது. கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கபடி, கிரிக்கெட் ஆகியவற்றில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 7 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 4 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட்டன.

டேபிள் டென்னிஸ், சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 1,000-ம் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை நாச்சியாா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் டி. வெங்கடேசன் வழங்கினாா்.

மையப் புலத் தலைவா் வி. இராமசுவாமி, உடற்கல்வி இயக்குநா் கே. சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.