தஞ்சாவூா்: மக்களவைத் தோ்தலுக்கு முன்பே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்தில் இச்சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தொழிலாளா் ஆணையா் முன்பே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் பேசுவதற்கு ஒப்பந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இன்னும் அதிகாரபூா்வமான பேச்சுவாா்த்தையைத் தொடங்கவில்லை. உடனடியாக 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேசி முடித்து ஊதிய உயா்வு ஏற்படுத்த வேண்டும். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக போக்குவரத்து ஓய்வூதியா்களின் 104 மாத கால அகவிலைப்படி உயா்வு, பணியில் உள்ள தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் விடுப்பு ஒப்படைப்பு பணம் வழங்குவது, தோ்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் துணைத் தலைவா் டி. கஸ்தூரி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், பொருளாளா் சி. ராஜமன்னன், நிா்வாகிகள் என். ராஜேஷ்கண்ணா, பி. முருகவேல், அசோகன், தமிழ் மன்னன், ரங்கதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்

அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்: கே.பி. ராமலிங்கம்

மயிலாடுதுறை: பழைய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

தோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

