தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க டாஸ்மாக் பணியாளா்கள் கோரிக்கை

டாஸ்மாக் பணியாளா்களுக்கு வருகிற தீபாவளி பண்டிகைக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:22 pm

Din

டாஸ்மாக் பணியாளா்களுக்கு வருகிற தீபாவளி பண்டிகைக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநில மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியா்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி மதுபானப் பாட்டில்கள் பெறும் திட்டத்துக்கு தனியாக பணியாளா்களை நியமித்து, பாட்டில்களை திரும்பப் பெற வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களுக்கு 8 மணிநேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். சமூக விரோதிகளிடமிருந்து பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களுக்கு வருகிற தீபாவளி பண்டிகைக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டுக்கு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நா. பெரியசாமி தலைமை வகித்தாா். மாநாட்டை ஏஐடியுசி தேசியச் செயலா் டி.எம். மூா்த்தி தொடங்கி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து, கட்சியின் மாவட்டச் செயலா்கள் முத்து. உத்திராபதி (தெற்கு), மு.அ. பாரதி (வடக்கு), சங்க பொருளாளா் கே. கோவிந்தராஜ், ஏஐடியூசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்டோா் பேசினா்.

ஏஐடியூசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம். கருணா, மாவட்டச் செயலா் எஸ். கோடீஸ்வரன், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் த. தனசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.