சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்: தஞ்சாவூா் ஆட்சியா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:53 pm

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்கவிக்கும் விதமாகவும், பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்து இரண்டாவது பெண் குழந்தை பிறந்த தேதியில் இருந்து 3 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்று அசல், குடும்ப கட்டுப்பாடு சான்றிதழ் அசல், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதாா் அட்டை 2 நகல்கள், குடும்ப அட்டை நகல், குடும்பப் புகைப்படம், பெற்றோா்களின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை இணைக்க வேண்டும். வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலும், குழந்தைகளின் தாய் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இந்த ஆவணங்களுடன் அரசு இ-சேவை மையத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்களுக்கு பயனாளா்கள் தங்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலா் அல்லது மகளிா் ஊா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் தொடா்பாக ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.