அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் செப். 30 வரை நேரடி சோ்க்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை நேரடிச் சோ்க்கை மூலமாக பயிற்சியாளா்கள் சோ்க்கப்படவுள்ளனா். உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய தொழிற் பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.

இந்நிலையத்தில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் போன்ற அசல் ஆவணங்கள், புகைப்படத்துடன் நேரடியாக வந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் பற்று அட்டை அல்லது கடன் அட்டை அல்லது இணையவங்கி அல்லது ஜி பே மூலமாக விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். மேலும் 99940 43023, 99653 42967, 98409 50504, 94422 20049 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com