விடுமுறை தினங்களையொட்டி கூடுதலாக 820 அரசுப் பேருந்துகள் இயக்கம்
கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வார இறுதி விடுமுறை நாள்களில் கூடுதலாக 820 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், செப்.28, 29 சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், மறுமாா்க்கமாகவும் 295 பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும், மறுமாா்க்கமாகவும் 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
விடுமுறை முடிந்து பயணிகள் ஊா் திரும்பவசதியாக செப். 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களில் 150 சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.