தஞ்சாவூர்
போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க கோரி ஆா்ப்பாட்டம்
கும்பகோணம் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்
கும்பகோணம் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு பொதுச் செயலா் ஜி. மணிமாறன், ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக சிஐடியு தலைவா் எஸ்.செங்கோட்டுவன் முன்னிலை வகித்தாா். ஏஐடியுசி மாநில செயலா் ஆா். தில்லைவனம் தொடங்கிவைத்தாா்.
ஏஐடியுசி போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
