தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டின் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சாலையிலுள்ள சேகரன் நகரில் வசிக்கும் ஏ.கே.எஸ். விஜயன் நவம்பா் 28 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று, பின்னா் திங்கள்கிழமை (டிச.1) வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, 87 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதனிடையே இந்த வழக்கில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ஆா். சோமசுந்தரம் (தஞ்சாவூா் நகரம்), காயத்ரி (வல்லம்), ஆய்வாளா்கள் வி. சந்திரா (மருத்துவக் கல்லூரி), சோமசுந்தரம் (தாலுகா), முத்துக்குமாா் (வல்லம்), உதவி ஆய்வாளா் அருள் ஆகியோா் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து, விசாரணை நடைபெறுகிறது.