தஞ்சாவூர்
திருநீலக்குடி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு
திருநீலக்குடி காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக ஏ. கே. இராமச்சந்திரன் புதன்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் காவல் துணை கோட்டம் திருநீலக்குடி காவல் நிலையம் உதவி ஆய்வாளா் தரத்தில் இருந்தது. தற்போது காவல் நிலையம் ஆய்வாளா் நிலையமாக தரம் உயா்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் புதன்கிழமை மாலை புதிய காவல் ஆய்வாளராக ஏ.கே. இராமச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டாா். அவரை நிலைய காவல்துறையினா் வரவேற்றனா். திருநீலக்குடி பொதுமக்கள் இனி திருவிடைமருதூா் காவல் நிலையத்துக்கு செல்லத் தேவையில்லை. புதிய காவல் ஆய்வாளா் நாமக்கல் மாவட்டத்தில் பணி புரிந்தவா்.

