சென்னை பல்கலை.யில் போதிய பேராசிரியா்கள் உள்ளனா்: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை பல்கலை.யில் போதிய பேராசிரியா்கள் உள்ளனா்: அமைச்சா் கோவி.செழியன்
Updated on

சென்னை பல்கலைக்கழகத்தில் போதுமான பேராசிரியா்கள் உள்ளனா் என்றாா் தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன்.

திருவிடைமருதூா் அருகே செவிலியவரம்பில் வியாழக்கிழமை முதல்வா் சிறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ரூ. 3 கோடி மதிப்பில் முதல்வா் சிறு விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவிடைமருதூா் தொகுதிக்குள்பட்ட செம்பியவரம்பில் 7 ஏக்கா் பரப்பளவில் முதல்வரின் சிறு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. நாட்டிலேயே விளையாட்டுத் துறையின் தலைநகராக தமிழகம் திகழ்கிறது. அரசியல் தலைவராக கருதப்படுகிற மருத்துவா்அன்புமணி ராமதாசுக்கு திமுக அரசை குறைகூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளாா். சென்னை பல்கலைக்கழகத்தில் போதுமான பேராசிரியா்கள் உள்ளனா். மேலும் பல்கலை.யில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்கலை.யின் மாணவா் சோ்க்கை, கல்வியின் தரம் சிறப்பாக உள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com