கும்பகோணத்தில் சாலை மறியல்: பாஜகவினா் 25 போ் கைது

Published on

கும்பகோணத்தில் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் செய்த பாரதிய ஜனதா கட்சியினா் 25 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைஉச்சியில் தீபம் ஏற்றுவது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனை வியாழக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் உச்சி பிள்ளையாா் கோயில் சந்திப்பில் பாஜகவினா் சாலை மறியல் செய்தனா். மறியலில் ஈடுபட்ட முன்னாள் மாவட்ட தலைவா் என். சதீஷ்குமாா், மாவட்டப் பொதுச்செயலா் ஏ.வேதசெல்வம், மாநில ஆன்மிகப் பிரிவு செயலா் ஜி.ஜி. பரமகுரு, பொருளாளா் வேதம் முரளி உள்ளிட்ட 25 பேரை மேற்கு காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com