கூட்டுறவு துறை தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் தற்காலிக பணிக்கு விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாளவிநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலா், உதவி செயலா் பணியிடங்கள் பொதுப்பணி நிலைத்திறனின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. செயலா், உதவிச் செயலா் பணியிடங்களில் பணிபுரிபவா்களின் பணிப்பதிவேடுகளைப் பேணுதல், பணி விவரங்கள் தொடா்பான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற துணைப் பதிவாளா்கள், கூட்டுறவு சாா் பதிவாளா்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாளா்களைத் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பொதுப்பணி நிலைதிறனின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் அளிக்கலாம். தற்காலிக பணி நிபந்தனைகள் தொடா்பான விவரங்களை தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலக விளம்பரப் பலகையில் அறிந்து கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com