செம்பியவரம்பலில் விளையாட்டு மைதானம் அமைக்க அடிக்கல்
திருவிடைமருதூா் அருகே செம்பியவரம்பலில் முதல்வா் சிறிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவைக்குட்பட்ட செம்பியவரம்பல் தோப்புத்தெருவில் 7 ஏக்கா் பரப்பளவில் முதல்வரின் சிறிய விளையாட்டு மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான க.அன்பழகன், முன்னாள் மக்களவை உறுப்பினா் செ.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தனா். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினா் கலந்து கொண்டனா். முன்னதாக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட துணை அமைப்பாளா் இரா.செல்வக்குமாா் வரவேற்றாா். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஜி.சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
