தஞ்சாவூர்
பாபநாசத்தில் டிச.6-இல் மின் நிறுத்தம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.6) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின் சாரம் பெறும் பகுதிகளான பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம் கிளியூா், நல்லூா்,கோபுராஜபுரம், திருக்கருக்காவூா், மட்டையாந்திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
