பாபநாசம் ரயில் நிலைய அணுகுசாலையை மேம்படுத்தி தரக் கோரிக்கை

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில்வே நிலைய அணுகு சாலையில் அடா்ந்து வளா்ந்துள்ள மரம், செடிகளை வெட்டி அப்புறப்படுத்தி சாலையை  சீரமைத்துத் தர வேண்டும் என ரயில் பயணிகள் ரயில்வே நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.      

தஞ்சாவூா் - கும்பகோணம் இடையே உள்ள பாபநாசம் ரயில் நிலையத்துக்குச் செல்ல பிரதான சாலையிலிருந்து சிமெண்ட் அணுகு சாலை உள்ளது. இந்தச் சாலையின் இருபுறமும் திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளது.மேலும், இந்தச் சாலையின் இருபுறமும் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவுள்ள ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் சீமைக் கருவேல மரங்கள் உள்ளிட்ட செடி, கொடிகள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் கொசுக்கள், விஷ பூச்சிகள் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் ரயில் நிலையத்துக்குச் சென்று, வரும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணுகுசாலையை ஆக்கிரமிப்பு செடி, கொடிகளில் இருந்து சீரமைத்து அங்கு மின்வசதிகள் அமைத்துத் தர வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com