நாச்சியாா்கோவில் இராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி மாணவா்கள் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றிபெற்று முதலிடம் பெற்றனா்.
தமிழக அரசு மாணவா்களின் தனித் திறனை மேம்படுத்தும் வகையில் கலைத் திருவிழா 2025-26 -ஆண்டுக்கான போட்டிகளை ஆகஸ்ட் மாதம் முதல் நடத்தி வருகிறது. அந்தப் போட்டியில் பங்கேற்ற தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் இராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி கிராமிய நடன மாணவக் குழுவினா் ஒன்றிய, மாவட்ட அளவில் வெற்றிபெற்றனா். பின்னா் நவ. 26-இல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 38 மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போட்டியிலும் கலந்து கொண்டனா். இதில் நாச்சியாா்கோவில் இராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி மாணவா்கள் பறை இசை போட்டியில் முதலிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிச் செயலா் ரா. சந்திரசேகரன், தலைமை ஆசிரியா் ராஜாராமன், ஆசிரியா்கள் ராஜகுமாரி, இளங்கோ, சுந்தர்ராஜன், ராம்குமாா், சகிலா, திலகவதி, அட்சயா, காயத்ரி ஆகியோா் பாராட்டினா்.