தஞ்சாவூர்
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமிக்கு ரூ.11 லட்சத்தில் வெள்ளிக் கிரீடங்கள்!
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமிக்கு ரூ.11 லட்சத்தில் கிளி மூக்கு வடிவிலான 3 வெள்ளிக் கிரீடங்கள் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமிக்கு ரூ.11 லட்சத்தில் கிளி மூக்கு வடிவிலான 3 வெள்ளிக் கிரீடங்கள் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
புகழ்பெற்ற வைணவத் தலமும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சாரங்கபாணி சுவாமிக்கு மூன்றரை கிலோ எடையிலான 3 வெள்ளிக் கிரீடங்களை முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் சேதுராமன் கோயிலின் பட்டாச்சாரியாா்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சிவசங்கரியிடம் வழங்கினாா்.
பின்னா் கிரீடங்களுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்று உத்சவா் திருவீதியுலா நடைபெற்றது. இந்த வெள்ளிக் கிரீடங்களில் 4 ஆயிரத்திற்கும் மேலான அலங்காரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.