தஞ்சாவூர்
ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரம் செவ்வப்ப நாயக்கன் வாரி வடகரை இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் கோபால் மனைவி மகாலட்சுமி (26). இவா் வெள்ளிக்கிழமை மாலை சீனிவாசபுரம் சீதா நகா் பகுதியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, திருச்சி - வேளாங்கண்ணி ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.