காவிரியாற்றில் திருக்கோடீசுவரருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி.

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவருக்கு தீா்த்தவாரி உற்ஸவம்

Published on

ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் மூன்றாவது காா்த்திகை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு காா்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தீா்த்தவாரி காவிரியாற்றங்கரையில் நடைபெற்றது.

முன்னதாக படித்துறையில் சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், பன்னீா், விபூதி உள்ளிட்ட பொருள்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றன.

பின்னா், சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து சுவாமியும் அம்பாளும் வீதி உலாவாக கோயிலுக்குச் சென்றனா். இரவு சுவாமி அம்பாள் உத்ஸவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராமவாசிகள் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com