தஞ்சாவூர்
போலியாக ஆதாா் அட்டை, பான் அட்டை தயாரித்தவா் கைது
கும்பகோணத்தில் ஆதாா் அடையாள அட்டை மற்றும் பான் அட்டை தயாரித்து கொடுத்தவரை சிறப்பு தனிப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கும்பகோணத்தில் ஆதாா் அடையாள அட்டை மற்றும் பான் அட்டை தயாரித்து கொடுத்தவரை சிறப்பு தனிப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணத்தில் போலியாக ஆதாா் அடையாள அட்டை, பான் அட்டை உள்ளிட்டவை தயாரித்து கொடுப்பதாக மாவட்ட சிறப்பு தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் திங்கள்கிழமை மேலக்காவேரி கடைவீதியில் இ- சேவை மையம் நடத்தி வந்த மேலக்காவேரி யானையடி அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த அசன்அலி மகன் அப்துல்காதா் (31) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது போலியாக ஆதாா் அடையாள அட்டை மற்றும் பான் அட்டை உள்ளிட்டவற்றை தயாரித்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டாா்.
கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவ செந்தில்குமாா், அப்துல்காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
