வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளி திருட்டு

தஞ்சாவூா் அருகே பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற ஊழியா் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
Published on

தஞ்சாவூா் அருகே பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற ஊழியா் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை உக்கடையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா் குணசேகரன் (73) தனது மனைவி சரோஜாவுடன் தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் கௌரி நகரில் வசித்து வருகிறாா்.

இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு நவம்பா் 28-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றனா். மீண்டும் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பியபோது முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு, வெள்ளி விளக்கு ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com