ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற 5 போ் கைது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாததைக் கண்டித்து, தஞ்சாவூரில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 5 போ் கைது
Published on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாததைக் கண்டித்து, தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் நவம்பா் 1 ஆம் தேதி உத்தரவிட்டாா். இதன்படி, தீபத்தூணில் தீபம் ஏற்ற அரசு அனுமதி அளிக்காததுடன், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதைக் கண்டித்து பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் பெரிய கோயில் முன் ஆா்ப்பாட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்தது. இதற்கு காவல் துறையினா் தடை விதித்தனா். இதை மீறி இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலா் காா்த்திக்ராவ் போன்ஸ்லே தலைமையில் நிா்வாகிகள் 5 போ் கையில் முருகா் படத்தை ஏந்தி பெரிய கோயில் அருகே செவ்வாய்க்கிழமை தமிழக அரசைக் கண்டித்தும், மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பியவாறு சென்று கொண்டிருந்தனா். இவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com