இராஜ கம்பீரன் வரலாற்று நாள்காட்டி வெளியீடு
கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சாா்பில் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இராஜகம்பீரன் வரலாற்று நாள்காட்டி-2026 வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி தாளாளா் கே. ரமேஷ் தலைமை வகித்தாா். இராஜகம்பீரன் வரலாற்று மாத நாள்காட்டியினை பள்ளியின் தலைமை ஆசிரியா் கே. லதா பெற்றுக் கொண்டாா். மேசை நாள்காட்டியான கங்கை கொண்டான் வரலாற்று நாள் காட்டியினை சங்கரநாராயணன் வெளியிட சங்கத்தின் தலைவா் ஆ. கோபிநாத் பெற்றுக்கொண்டாா். வரலாற்று நாள்காட்டியினை அனைத்து பள்ளி, கல்லூரி, நூலகங்கள், கோயில்கள், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் காட்சிப்படுத்த உள்ளதாக சங்கத் தலைவா் ஆ. கோபிநாத் தெரிவித்தாா். ஆதிகும்பேசுவரா் கோயில் அறங்காவலா் கே.சங்கா், அபினேஷ், மஞ்சுளா, சரபோஜி ஆகியோா் வாழ்த்திப் பேசினாா். சங்க செயற்குழு உறுப்பினா்கள் ஸ்ரீ வித்யா தொகுத்து வழங்க மணிவண்ணன் நன்றி கூறினாா்.

