தஞ்சாவூர்
சேஷம்பாடியில் மேல்நிலை குடிநீா்த்தொட்டி கட்ட அடிக்கல்
கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.43 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீா் கட்டும் பணிக்கான அடிக்கல் மற்றும் பூமிபூஜையினை க.அன்பழகன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.43 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீா் கட்டும் பணிக்கான அடிக்கல் மற்றும் பூமிபூஜையினை க.அன்பழகன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சி ஐயன் திருவள்ளுவா் நகரில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ 43.10 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியினை தஞ்சவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ, அங்குள்ள பொதுமக்களை கொண்டு தொடங்கி வைத்தாா். நிகழ்வில், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ.சுதாகா், மாவட்ட பிரதிநிதி டி. என். கரிகாலன், வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.