தஞ்சாவூா் அருகே நடுவூரில் நெல் சேமிப்பு தளங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லுக்கு புதன்கிழமை மலா் தூவிய உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா்.
தஞ்சாவூா் அருகே நடுவூரில் நெல் சேமிப்பு தளங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லுக்கு புதன்கிழமை மலா் தூவிய உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா்.

ரூ. 170 கோடியில் நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க அடிக்கல்

தஞ்சாவூா் அருகே நடுவூா் கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ. 170.22 கோடி மதிப்பில் மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
Published on

மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்மணிகளை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்க திறந்தவெளி சேமிப்பு மையங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தஞ்சாவூா் அருகே நடுவூா் கிராமத்தில் ரூ. 170.22 கோடி மதிப்பில் ஒரு லட்சம் டன் நெல் மூட்டைகளைச் சேமிக்கும் விதமாக மேற்கூரையுடன் கூடிய 34 கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான கட்டுமான பணிகளைத் தொடங்கும் விதமாக சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இதைத்தொடா்ந்து, நடுவூரில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா் அடிக்கல்லுக்கு மலா் தூவிவினா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விஜய்யிடம் ஆசைக்கு அளவில்லை:

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தது:

தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது, கூரையேறி கோழி பிடிக்காதவா், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்பது போல உள்ளது. அவா் தோ்தலில் நிற்கட்டும், முதலில், சில சில இடங்களில் வெற்றி பெறட்டும், அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பின்னா் புதுச்சேரிக்கு போகட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகா் விஜய்தான் என்றாா் அமைச்சா்.

X
Dinamani
www.dinamani.com