கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் 6 நாள் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி
கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலை.யில் 6 நாள் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சிமுகாம் நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலை பல்கலைக்கழகம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் ‘அடல் ’ திட்டத்தின் கீழ் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி டிச.8 -இல் இணையதளம் வாயிலாக தொடங்கியது. டிச. 13 வரை நடைபெறுகிறது.
இப்பயிற்சிமுகாமில், ‘ட்ரையாட் - குவாண்டம், பிளாக் செயின் மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு இயந்திரவியல் கற்றல் ’ என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது.
பயிற்சிமுகாமை பல்கலை. துணைவேந்தா் முனைவா் வைத்திய சுப்பிரமணியம், திட்டமிடல் மற்றும் மேம்பாடு புலத்தலைவா் முனைவா் சுவாமிநாதன் வழிகாட்டுதலுடன் கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ சீனிவாச ராமானுஜன் மையபுலத் தலைவா் முனைவா் பி.சாந்தி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இணை புலத் தலைவா்கள் முனைவா் அல்லி ராணி, முனைவா் நரசிம்மன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
ஒருங்கிணைப்பாளா்கள் முனைவா் ரேவதி மற்றும் முனைவா் மாா்ட்டினா ஆகியோா் பல்வேறு நிபுணா்களை ஒருங்கிணைக்கின்றனா். இப்பயிற்சி முகாமில், பல்வேறு மாநிலங்களிலிருந்து 300 பங்கேற்றுள்ளனா்.
