தஞ்சாவூர்
சாலை பாதுகாப்புவிழிப்புணா்வு முகாம்
தஞ்சாவூரில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு, கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நடைபெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியையும், விழிப்புணா்வு பிரசார வாகனத்தையும் முதன்மை மாவட்ட நீதிபதி பி. வேல்முருகன் தொடங்கி வைத்தாா். மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். பாரதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக உதவி மேலாளா்கள் ராஜ்மோகன், ராஜேஸ், அரசு வழக்குரைஞா்கள் சத்தியமூா்த்தி, சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
