பேராவூரணி, சேதுபாவாவில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் ரூ.52 லட்சத்தில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை எம்எல்ஏ என். அசோக் குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பேராவூரணி ஒன்றியம் அம்மையாண்டி ஊராட்சியில் வீரராகவபுரம் - சாணாகரை இணைப்புச் சாலை ரூ.23.80 லட்சம் மதிப்பீட்டிலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் விளங்குளம் ஊராட்சி, மாருதிப்பட்டினம் முஸ்லிம் தெருவில் ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, ருத்திரசிந்தாமணி ஊராட்சி பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா், மரக்காவலசை ஊராட்சி, துறையூா் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழற்குடை என மொத்தம் ரூ.52.30 லட்சம் மதிப்பீட்டிலான வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை எம்எல்ஏ என்.அசோக்குமாா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளில், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம் , பேராவூரணி ஒன்றியச் செயலா் க.அன்பழகன் , சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா்கள் வை.ரவிச்சந்திரன் , குழ.செ.அருள்நம்பி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலியபெருமாள், செல்வேந்திரன், (பேராவூரணி ) நாகேந்திரன், மனோகரன்(சேதுபாவாசத்திரம்) மற்றும் கிராமப் பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
