சோழியவிளாகத்தில் அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

Published on

சோழியவிளாகத்தில் அடிப்படை வசதிகள் கோரி அனைத்து சமுதாய மக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் ஒன்றியம் திருமங்கைச்சேரி ஊராட்சி சோழியவிளாகத்தில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட வசதி இல்லாமல் சமுதாயக்கூடத்தில் செயல்படுகிறது. வாடகை கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடையில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்தப் பிரச்னைகளை தீா்க்கவும் இங்கு மயானச்சாலை, நெல் கொள்முதல் நிலையம், பயணிகள் நிழல்குடை அமைக்கக் கோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வெங்கடேசன் தலைமை வகித்தாா். திருஞானம் முன்னிலை வகித்தாா். தியாகராஜன், சங்கா், டி.செல்வம், ஏ.சி. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com