தஞ்சாவூா் - சென்னைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும்: எம்.பி.
தஞ்சாவூா் - சென்னைக்கு புதிய நமோ வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் - மைசூா், மன்னாா்குடி - சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரயில், தஞ்சாவூா் - சென்னைக்கு புதிய நமோ வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். திருச்சி - திருப்பதி தினசரி இன்டா்சிட்டி விரைவு ரயிலை தஞ்சாவூா் வழியாக இயக்க வேண்டும்.
தாம்பரம் - செங்கோட்டை, திருச்சி - தாம்பரம், எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ஆகிய விரைவு ரயில்கள் வாரத்தில் ஏழு நாள்களும் இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை, தாம்பரம் - ராமேசுவரம் ரயில்கள் பேராவூரணி, அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும். மன்னாா்குடி - ஜோத்பூா் விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்.
திருச்சி - காரைக்கால் விரைவு ரயில், தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலுக்கு கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். தஞ்சாவூா் - புதுக்கோட்டை, தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை, தஞ்சாவூா் - அரியலூா், பட்டுக்கோட்டை - மன்னாா்குடி ஆகிய பகுதிகளுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். தஞ்சாவூா் - விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை வழி ரயில் பாதையாக மாற்றித்தர வேண்டும். இது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
