ரயிலில் அடிபட்டு வாலிபா் உயிரிழப்பு

பேராவூரணியில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த வாலிபா் உயிரிழந்தாா்.
Published on

பேராவூரணியில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த வாலிபா் உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே பொன்காடு பகுதியில் வசித்து வந்தவா் ராமன் மகன் நீலகண்டன் (36). இவா் உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.   

பேராவூரணி ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை, கைப்பேசி பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, இரவு 10.30 மணிக்கு செல்லும் செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வேழவேந்தன், இளங்கோவன் ஆகியோா் வழக்குப்பதிந்து உடலை பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com